கனடா வாழ் ஈழத்தமிழன் சிவயோகநயகம் மோகனதாஸ் அவர்களால் கின்னஸ் உலகசாதனை ஏட்டில் தனது பெயரை பதிப்பதற்கான முயற்சியில் நேற்று ஸ்காபரோ குயின்ஸ் பலசில் (Queen palace) மக்கள் முன்னிலையில் ஈடுபட்டார்.
நேற்று 03/12/2011, காலை 11:00 மணியாளவில் இச் சாதனையை செய்ய ஆரம்பித்த அவர் வலியை தாங்கி இரவு 11:15 மணியளவில் இத்தாலி நாட்டில் சீனரான வெய் ஷெங்க்சு (Wei Shengchu) என்பவரால் 2009 இல் கின்னஸ் சாதனையாக தலையில் 2009 ஊசிகள் குத்தப்பட்டு இருந்ததை முறியடித்து சுமார் இரவு 11:30 மணிக்கு 2020 என்ற புதிய உலக சாதனையை நிலைநாட்டியுள்ளார்.
இந்த உலக சாதனையாளனை தமிழ் மக்கள் முன்னே கொண்டு செல்லவதற்கான ஊடகமாக இருப்பதில் தமிழ் பிஸினஸ் கனக்சன் பெருமைப்படுகிறது.
















