ஆறாம் ஆண்டு நிறைவையொட்டி தமிழ் வ ண் நான்கு முக்கிய அறிவிப்புக்களைச் செய்துள்ளது. இந்த அறிவிப்புக்களை அதன் நிறைவேற்று பணிப்பாளர் திரு மயூரன் மயில்வாகனம் 13.11.20011 அன்று நடைபெற்ற அதன் கொண்டாட்ட நிகழ்வில் தெரிவித்தார்.
1. தமிழ் முதல்த்தர தொலைக்காட்சி சேவை வழங்குனராக தெரிவு செய்யப்பட்ட தமிழ் வன் கனடாவின் தமிழ்த் தேசிய தொலைக்காட்சியாகவும், பெல் (Bell Channel) அலைவரிசையினூடாக தனதுச் சேவையினை விரிவாக்கியிருப்பதுடன் ஒர் ஆண்டுக்கு இவ்வலைவரிசையினூடாக இலவசமாகக் கண்டு களிக்கலாம் எனத் தெரிவித்தார்.
2. இலங்கை யாழ்ப்பாணத்தில் தனது கலையகத்தைத் திறந்துள்ளதாகவும், கனடாவில் இருப்பவர்கள் அதன் நேரடி ஒளிபரப்பை காலை. மாலை இரண்டு தடவை காணலாம் என்றார்.
3. 2012 இல் இது தனது சேவையை ஐரோப்பா, அவுஸ்ரேலியா, மற்றும் நியுசிலாந்துக்கு விரிவாக்கவுள்ளது எனவும்
4. ஸ்கார்பறோ- மார்க்கம் எஃப் எம் (FM)- இப்பகுதி மக்களின் நன்மை கருதி விரைவில் ஆரம்பிக்கப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
இந் நிகழ்விற்கு ஒன்ரறியோ முதல்வர் திரு டொல்றன் மக்கன்சியும் தனது ஆசிச் செய்தியைத் தெரிவித்திருந்தார். அத்துடன் ஸ்கார்பறோ ஒன்ரறியோ பாராளுமன்ற உறுப்பினர் திரு பஸ் பல்கிச்சூன், மார்க்கம் 7 ஆம் வட்டார உள்ளூராட்சி மன்றத் தலைவர் திரு லோகன் கனபதி, மற்றும் பல வர்த்தக பிரமுகர்களும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.







